மனிதாபிமான உதவியாக 4 கோடி அமெரிக்க டாலர்களை பெற்றது ஆப்கானிஸ்தான்
2023-03-16 16:58:17

மனிதாபிமான உதவியாக மற்றொரு தொகுதி 4 கோடி அமெரிக்க டாலர்களை, ரொக்கப் பற்றாக்குறை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் செவ்வாயன்று பெற்றுக்கொண்டது என்று அந்நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கியின் அறிக்கையில்  புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏழ்மையான பொருளாதாரத்தை நிலைப்படுத்தும்  நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை வரவேற்று, காபூலில் உள்ள ஒரு தனியார் வணிக வங்கியில் இந்தத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் பொருளாதாரத்தை நிலைப்படுத்த, சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, கடந்த 17 மாதங்களில் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர்களை ஆப்கானிஸ்தான்  ரொக்கமாகப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.