வெளிநாட்டு வர்த்தகம், சீனாவில் முதலீடு உள்ளிட்டவை பற்றி சீன வணிக அமைச்சகம் அறிமுகம்
2023-03-16 20:08:29

இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் சீனாவின் மொத்த சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி 6 லட்சத்து 18 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததற்குச் சமமாக உள்ளது. நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் சீரான துவக்கத்தைக் கண்டு, வளரக்கூடிய தன்மையை வெளிக்காட்டியுள்ளது என்று சீன வணிக அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் ஷு யுதிங் அம்மையார் மார்ச் 16ஆம் நாள் கூறினார்.

மேலும், இவ்வாண்டில், முதலீட்டை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை சீன வணிக அமைச்சகம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதோடு, வெளிநாட்டு முதலீட்டின் சந்தை நுழைவுக்கான அனுமதியும் தொடர்ந்து தளர்த்தப்படும்.  இதனிடையே, திறப்பு அளவை விரிவாக்கி, உலகளவில் முதல்தர வணிகச் சூழலை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையில் வளர்ச்சியுறச் செய்யவும் சீன வணிக அமைச்சகம் பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், 133ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி ஏப்ரல் 15 முதல் மே 5ஆம் நாள் வரை குவாங்சோ நகரில் நடைபெற உள்ளது. இப்பொருட்காட்சி நேரடியாக நடத்தப்படும் போது, அதன் இணைய தளமும் இயங்கி, காட்சியாளருக்கு முழு நாள் சேவையை வழங்கும் என்றும் அவர் கூறினார்.