துருக்கியில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய புனரமைப்புப் பணி
2023-03-16 10:14:00

துருக்கியில் அண்மையில் நடந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இழப்புகளை மதிப்பீடு செய்யும் பணி விரைவில் நிறைவேற்றப்பட்டு, பேரழிவுக்குப் பிந்தைய புனரமைப்பை ஒரு ஆண்டுக்குள் முடிக்க துருக்கி அரசு உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு அரசுத்தலைவர் ரெசெப் தயிர் எர்டோகன் மார்ச் 15ஆம் நாள் தெரிவித்தார்.

பிப்ரவரி 6ஆம் நாள் துருக்கியின் கஹ்ராமன்மராஸ் மாநிலத்தில் ஒரே நாளில் ரிக்டர் அளவுகோலில் 7.7 மற்றும் 7.6 ஆக பதிவான இரண்டு கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்நிலநடுக்கம் துருக்கியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 இலட்சத்து 30 ஆயிரம் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வீடுவாசலின்றி அல்லல்பட்டனர். இந்த நிலநடுக்கங்களினால் துருக்கிக்கு 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களைத் தாண்டி இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று ஐ﹒நாவின் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மார்ச் 7ஆம் நாள் தெரிவித்தார்.