உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள சீனாவின் முன்மொழிவு
2023-03-16 18:59:42

உலக வர்த்தக அமைப்பின் வர்த்தம் மற்றும் சுற்றுச்சூழல் கமிட்டியின் அதிகாரப்பூர்வக் கூட்டம் மார்ச் 15ஆம் நாள் நிறைவுற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, வர்த்தகத்துக்கு சுற்றுச்சூழல் கொள்கை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பல்வேறு தரப்புகள் விவாதம் நடத்தின. ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் இயங்குமுறை பற்றி பலதரப்பு விவாதம் நடத்த வேண்டும் என்ற சீனாவின் முன்மொழிவு, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் முன்மொழிவு செயலாக்கத் தன்மை வாய்ந்ததாக நார்வே, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன. மேலும், இம்முன்மொழிவு உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்துக்குப் பொருத்தமாக உள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.