புதிய காலத்தில் சட்ட அடிப்படையிலான சீன இணையவெளி ஆட்சிமுறை பற்றிய வெள்ளையறிக்கை
2023-03-16 15:25:59

புதிய காலத்தில் சட்ட அடிப்படையிலான சீன இணையவெளி ஆட்சிமுறை பற்றிய வெள்ளையறிக்கையைச் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்டு, செய்தியாளர் கூட்டத்தை நடத்தியுள்ளது.

சீனாவின் இணையச் சட்ட ஆட்சிமுறை நிலைமையை வெள்ளை அறிக்கை விரிவாக அறிமுகப்படுத்தி, தொடர்புடைய அனுபவத்தையும் நடைமுறையையும் பகிர்ந்து கொண்டுள்ளது.

இணையத் துறையில் 140 க்கும் மேற்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளைச் சீனா இயற்றி வெளியிட்டுள்ளது. இவை இணைய வல்லரசின் உருவாக்கத்துக்கு உறுதியான உத்தரவாதத்தை வழங்கியுள்ளன. மேலும், இணையச் சட்ட ஆட்சிமுறை பற்றிய சர்வதேசப் பரிமாற்ற ஒத்துழைப்பைச் சீனா ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, உலக நாடுகளுடன் இணைந்து, உலக இணையச் சட்ட ஆட்சிமுறைச் சீர்திருத்தத்தில் கூட்டாகப் பங்கெடுத்து, இணைய வளர்ச்சியின் வாய்ப்புகளையும் சாதனைகளையும் கூட்டாக அனுபவிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த வெள்ளையறிக்கையில் கூறப்பட்டுள்ளது.