சொந்த மனித உரிமை பிரச்சினையில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்
2023-03-16 18:23:24

அமெரிக்காவில் மோசமாகி வரும் பெருவெறுப்பு குற்றம் அந்நாட்டின் இனவெறி மற்றும் மனித உரிமை பிரச்சினையில் மிக சிறிய பகுதியாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 16ஆம் நாள் கூறினார்.

சொந்த மனித உரிமை பிரச்சினையை அமெரிக்கா தொலைநோக்கியைப் பயன்படுத்தி பார்க்கும் அதேவேளை இதர நாடுகளின் மனித உரிமை பிரச்சினையை உருபெருக்கியைப் பயன்படுத்தி பார்த்து விமர்சிக்கிறது. மனித உரிமை பிரச்சினை குறித்து அமெரிக்கா இரட்டை வரையறைகளை மேற்கொள்கின்றது என்று அவர் தெரிவித்தார்.