அடிப்படை வசதியைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய ஒன்றிய-நேட்டோ ஒத்துழைப்பு
2023-03-17 14:03:00

முக்கிய அடிப்படை வசதிகளைப் பாதுகாப்பது தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவும் கூட்டமைப்புப் பணிக் குழுவை உருவாக்கியுள்ளன என்று நார்வே தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் மார்ச் 16ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்கள் சீர்குலைக்கப்பட்டதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய குழுவை தயாராக தொடங்கியது. அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள இக்குழு முதல் கூட்டத்தையும் நடத்தியுள்ளது. இக்குழுவில் எரியாற்றல், வெளிமண்டலம், டிஜிட்டல் வெளி உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இத்துறைகள் தொடர்புடைய முக்கிய அடிப்படை வசதிகளுக்கான அச்சுறுத்தலைக் கண்டறிவர் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.