ஆப்கான் மக்களுக்கு உதவியளிக்க வேண்டும்:சீனா வேண்டுகோள்
2023-03-17 17:30:33

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழுவின் கவுன்சிலர் சுன் ட்சிச்சியாங் 16ஆம் நாள் கூறுகையில், அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை ஆப்கானிஸ்தான் நனவாக்குவதற்கு சர்வதேசச் சமூகம் கூட்டாக உதவியளிக்க வேண்டும், அந்நாட்டு மக்கள் தேக்க நிலையிலிருந்து வெளியேறி அருமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பவையில் ஆப்கான் பிரச்சினை தொடர்பான 2 தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பிறகு அவர் மேலும் கூறுகையில், இவ்விரு தீர்மானங்கள் பாதுகாப்பவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதை சீனா வரவேற்பதாகவும் கூறினார்.