நெருக்கடி தொடர்ந்தால் வங்கிப் பிரச்சினை மேலும் மோசமாகும்:யெலன்
2023-03-17 13:22:18

சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை அடுத்தடுத்து மூடப்பட்டதால், சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனெட் யெலன் 16ஆம் நாள் செனெட் அவையின் நிதி ஆணையத்தில் நடைபெற்ற கேட்டறிதல் கூட்டத்தில் தெரிவித்தார். நெருக்கடி மேலும் பரவுவதைத் தடுத்து, சேமித்தவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதம், கண்காணிப்பு நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்விரு வங்கிகளுக்கு அவசர உதவிகள் வழங்கும் என்று அவர் கூறினார்.

மேலும், இத்தகைய அவசர உதவிகள் நிரந்தர நடவடிக்கையல்ல எனக் குறிப்பிட்ட அவர், வங்கிகளிலுள்ள அனைத்து சேமிப்புத் தொகைகளுக்கும் அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்காது என்றும் தெரிவித்தார். நெருக்கடி மேலும் பரவினால், வங்கிகளில்  சேமிக்கப்பட்டிருக்கும் முழு தொகையையும் சேமித்தவர்கள் ஒரே சமயத்தில் திரும்பக் கேட்கும் அபாயம் உருவாகும் என்றும யெலன் எச்சரித்தார்.