ஆப்கானிஸ்தானில் ஐ.நாவின் சிறப்பு அரசியல் பணி ஆணை நீட்டிப்பு
2023-03-17 17:28:31

ஆப்கானிஸ்தான் தொடர்பான 2 தீர்மானங்கள் மார்ச் 16ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பவையில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றில் 2678ஆவது தீர்மானத்தில், ஆப்கானிலுள்ள ஐ.நாவின் உதவிப் பணிக்கான ஆணையை 2024ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாளுக்கு நீட்டிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் உதவிப் பணிக் குழு தொடர்ந்து இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அந்நாட்டின் அரசியல் மற்றும் நலனுடன் தொடர்புடைய தரப்புகள் அனைத்தும் ஐ.நாவின் உதவிப் பணிக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஐ.நா. மற்றும் தொடர்புடைய நபர்களின் பாதுகாப்பு மற்றும் நடமாடும் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் இத்தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானின் சவால்களைச் சமாளிப்பதற்கான பரிந்துரைகள் குறித்து சுதந்திர மதிப்பீடு செய்ய வேண்டும் என்று 2679ஆவது தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.