கையிருப்பு விகித்தைக் குறைக்க சீன மத்திய வங்கி முடிவு
2023-03-17 19:15:09

நிதி நிறுவனங்களுக்கான கையிருப்பு விகிதத்தை மார்ச் 27ஆம் நாள் முதல் 0.25 விழுக்காட்டு புள்ளிகள் குறைக்க உள்ளதாக சீன மக்கள் வங்கி மார்ச் 17ஆம் நாள் தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்குப் பிறகு, நிதி நிறுவனங்களின் சராசரியான கையிருப்பு விகிதம் சுமார் 7.6 விழுக்காடாக இருக்கும்.

பொருளாதாரத்தின் தர உயர்வு மற்றும் நியாயமான வளர்ச்சியை ஊக்குவித்து, பொருளாதாரத்துக்கு சேவைபுரியும் நிலையை உயர்த்தி, வங்கி முறைமையின் நியாயமான மற்றும் போதுமான புழக்கத்தை நிலைநிறுத்துவது இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று மத்திய வங்கியின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.