ஐ.நா கூட்டத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் தீங்கு பற்றி சீன சின்ஜியாங் பிரதிநிதியின் உரை
2023-03-18 16:25:17

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த மைமைடி 17ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 52ஆவது கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துகையில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் தீங்கு பற்றி எடுத்துரைத்தார். சின்ஜியாங் சட்டப்படி பயங்கரவாதத்தை எதிர்த்து வருகிறது. பயங்கரவாதக் குற்றங்களை ஒடுக்குவது, மக்களின் உயிர் மற்றும் சொத்தைப் பாதுகாத்து, சமூக நிதானத்தைப் பேணிக்காத்து, மனித உரிமையை உத்தரவாதம் செய்வதற்கா நேர்மையான செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.