ஐ.நாவின் கூட்டத்தில் ஹாங்காங்கிற்கான நம்பிக்கையைத் தெரிவித்த ஹாங்காங் இளைஞர்
2023-03-18 16:28:44

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் இளைஞரும், ஐ.நா-சீனச் சங்கத்தின் ஆளுநருமான யாங் சேங்லோங் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 52ஆவது கூட்டத்தொடரில் 17ஆம் நாள் உரை நிகழ்த்துகையில், ஹாங்காங்கின் நீண்டகால நிதான வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஹாங்காங் ஒரு சிறப்பான, உயிராற்றல் மிக்க நகரமாகும். ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டு ஹாங்காங்கிற்கு உயர்நிலையான தன்னாட்சி உரிமையை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.