சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆழ்ந்த நட்புறவு:பாகிஸ்தான் அரசுத் தலைவர்
2023-03-18 16:46:08

பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆரிஃப் ஆல்வி 17ஆம் நாள் சீன ஊடகக் குழுமச் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், சீன அரசுத் தலைவராக ஷிச்சின்பிங் மீண்டும்  தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவை வெகுவாகப் பாராட்டினார். சீனா மற்றும் பாகிஸ்தானின் நட்புறவு, மலையை விட உயர்ந்து, கடலை விட ஆழமானது என்று அவர் கூறினார்.