உலக மனித உரிமை பற்றிய சீனாவின் கருத்துக்கள்
2023-03-18 16:46:45

ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலின் 52ஆவது கூட்டத்தொடரில் உலக மனித உரிமைக்கான அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் சென் சூ, 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் சார்பாக, உரை நிகழ்த்தினார்.

தனது உரையில் உலக மனித உரிமை அறிக்கையைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும். மக்களை மையமாகக் கொண்டு, வளர்ச்சிக்கான உரிமையை செயல்படுத்த வேண்டும். மனித உரிமை பாதுகாப்பில் புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கில் கவனம் செலுத்தி, நலிந்தோர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிக்க வேண்டும். மனித உரிமைத் துறையில் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற 4 அம்சங்களை அவர் முன்வைத்தார்.