நேட்டோவில் பின்லாந்து சேர்வதற்கு ஆதரவு: துருக்கி
2023-03-18 17:19:59

நேட்டோ அமைப்பில் சேர்வதற்காக பின்லாந்து மேற்கொண்ட முயற்சிகளை ஏற்றுக்கொண்டு, இது தொடர்பான அங்கீகார நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக துருக்கியின் அரசுத் தலைவர் எர்தோகன் தெரிவித்தார்.

அங்காராவில் பின்லாந்து அரசுத் தலைவர் நினிஸ்டோவுடன் 17ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் இதைத் தெரிவித்தார்.

தவிரவும், துருக்கியிடம் 120 பயங்கரவாதிகளைக் கடத்தி ஒப்படைக்கும் கோரிக்கையை ஸ்வீடனிடம் கோரியுள்ளதாகவும், ஸ்வீடன் இதனைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் எர்தோகன் கூறினார். நேட்டோவில் ஸ்வீடன் சேரும் அங்கீகாரத்தை துருக்கி முன்னேற்ற முடியாததற்கான காரணம் இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.