உலக முன்மொழிவு:ஷிச்சின்பிங்
2023-03-18 19:01:48

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் உலகளாவிய நாகரிக முன்முயற்சியை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 15ஆம் நாள் முன்மொழிந்தார். 2021ஆம் ஆண்டில், 76ஆவது ஐ.நா. பேரவை கூட்டத்தொடரில் உலக வளர்ச்சி முன்மொழிவை அவர் முன்வைத்தார்.

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2022ஆம் ஆண்டு கூட்டத்தில் உலகப் பாதுகாப்பு முன்மொழிவை அவர் முன்வைத்தார். சீன அரசுத் தலைவர்கள் முன்வைத்த சீனாவின் பல கருத்துக்களுக்குப் பல்வேறு நாடுகள் முக்கியத்துவம் அளித்துள்ளன.

இம்மூன்று முன்மொழிவுகள், சர்வதேசச் சமூகத்தின் நலன் கருதி சீனா முன்வைத்த பொது முன்மொழிவுகளாகும். அவை, மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தையும் மனித குல நாகரிகத்தின் புதிய வடிவங்களையும் உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றும் என்று சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் வாங் யிவெய் கருத்து தெரிவித்தார்.

உலக வளர்ச்சி முன்மொழிவு தற்போது மனிதக் குலம் எதிர்கொண்டுள்ள மையப் பிரச்சினைகளுக்குப் பொருந்தியது என்று லாவோஸ் துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான ஷரோன்சாய் தெரிவித்தார்.

சர்வதேச விவகாரங்களில் செயலாக்க பங்கினை ஆற்றுவது தொடர்பான வாக்குறுதியைச் சீனா உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்து வருகிறது என்று ஸ்லோவேனியாவின் முன்னாள் அரசுத் தலைவர் டானிலோ டர்க் தெரிவித்தார்.