உலகச் சொத்து மேலாண்மை மன்றத்தின் 2023ஆம் ஆண்டுக் கூட்டம்
2023-03-19 16:20:45

உலகச் சொத்து மேலாண்மை மன்றத்தின் 2023ஆம் ஆண்டுக் கூட்டம் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில் இம்மன்றத்தின் தலைவரும் சீனாவின் முன்னாள் நிதி அமைச்சருமான லூ ஜீவி கூறுகையில், சீனா, வெளிநாட்டு முதலீட்டைப் பெரிய அளவில் ஈர்த்து பயன்படுத்தவுள்ளது. திறந்த சீனச் சந்தை, எதிர்காலத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கும் என்றார்.

சிக்கலான மற்றும் எப்போதும் மாறிவரும் சூழலில் சீன சந்தையின் திறப்பு, நிதானம் மற்றும் வளர்ச்சி, உலகிற்குப் பல தரப்பட்ட வாய்ப்புகளையும் தேர்வுகளையும் வழங்குகிறது என்று சீன மக்கள் வங்கியின் துணைத் தலைவர் சியேன் சாங்னங் தெரிவித்தார்.