ரஷியாவில் ஷிச்சின்பிங் பயணம் நட்புறவுக்கான பயணம்
2023-03-19 19:03:36

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 20ஆம் நாள் முதல் 22ஆம் நாள் வரை ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்பு மீது எப்போதும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. புதினுடனான உறவு, நெருங்கிய நண்பர்களைப் போன்றது என்று ஷிச்சின்பிங் கூறினார்.

2018ஆம் ஆண்டில் சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹை சியோங்கிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் புதின் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பொருத்தமான ஒத்துழைப்புக் கூட்டாளி மற்றும் நம்பகமான நண்பர் என்றார்.

இரு தலைவர்களின் தலைமையில், பெரிய நாடுகளுக்கிடையில் நெடுநோக்கு பார்வையில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் அண்டை நாட்டுப் பரிமாற்றங்களின் பாதையில் சீனாவும் ரஷியாவும் வெற்றிகரமாக பயணித்து வருகின்றன. சர்வதேச உறவின் எடுத்துக்காடாக இது திகழ்கின்றது.