சீனாவின் நவீனமயமாக்கம் மற்றும் உலகம் பற்றிய நடவடிக்கைகள்
2023-03-19 18:49:53

அமெரிக்கா, ஈரான், கம்போடியா, பிரேசில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, கென்யா முதலிய நாடுகளிலும் பிரதேசங்களிலும் சீனாவின் நவீனமயமாக்கம் மற்றும் உலகம் பற்றிய செய்தி ஊடக நடவடிக்கையைச் சீன ஊடகக் குழுமம் கடந்த 9ஆம் நாள் முதல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

ஐ.நா. மற்றும் தொடர்புடைய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் செய்தி ஊடகத்தின் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேரடியாகவும் இணையவழியிலும் இதில் பங்கெடுத்து, இதில் சீனாவின் நவீனமயமாக்கம், உலக வளர்ச்சிக்குக் கொண்டு வந்த புதிய வாய்ப்புகள் குறித்து கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டனர்.

மார்ச் 19ஆம் நாள் வரை, 23 நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. 93 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1034 வெளிநாட்டு முக்கிய செய்தி ஊடகங்கள் இதை நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டன. 106 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். இந்நடவடிக்கைகள் வெளிநாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.