2022இல் சீனாவின் தொழிற்துறை வளர்ச்சி 40 இலட்சம் கோடி யுவான்!
2023-03-19 17:14:53

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  வழங்கிய தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில், சீனத் தொழிற்துறையின் வளர்ச்சி முதன்முதலாக 40 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது சுமார் 33.2 விழுக்காடு வகித்துள்ளது. இதில் ஆக்கத் தொழிற்துறையின் வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 27.2 விழுக்காடு வகித்தது. தவிரவும், சீன ஆக்கத் தொழிற்துறையின் அளவு தொடர்ந்து 13 ஆண்டுகளாக உலகில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் தொழில் வகைப்பாடு வரையறையின்படி, பெரிய, நடு மற்றும் சிறிய வகைகளுடன் உலகில் முழு தொழில் வகைகளையும் கொண்ட ஒரேயொரு நாடாக சீனா திகழ்கின்றது.

கடந்த பல ஆண்டுகளாக, சீனாவின் புதிய ஆற்றல் வாகனம் மற்றும் ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்களின் உற்பத்தியளவு உலகில் முதலிடம் வகித்து வருகின்றது. மேலும், உலகளவில் முன்னேறிய தொழில் நுட்பமுடைய மிக பெரிய நகரும் செய்தித் தொடர்பு வலைப் பின்னலையும் சீனா கட்டியமைத்துள்ளது.