அமெரிக்காவில் 186 வங்கிகளுக்கு ‘திவால்’நெருக்கடி
2023-03-19 19:20:49

சிலிகான் வேலி வங்கி மூடப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பின்விளைவு பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது. அமெரிக்க நிதிச் சந்தையில் கொந்தளிப்பு தொடர்ந்து காணப்படுகிறது. அமெரிக்க அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும்,  மோசமான நிலை தணியவில்லை.

சமீபத்திய ஆய்வின்படி, அமெரிக்காவில் குறைந்தது 186 வங்கிகள்  சிலிகான் வேலி வங்கியைப் போன்ற பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 17ஆம் நாள் தெரிவித்தது.

அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களின் பொருளியலாளர்கள் கூட்டாக வெளியிட்ட ஓர்  ஆய்வு அறிக்கையில்,  ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியதால், அமெரிக்க வங்கி அமைப்புமுறையின்  பலவீனத்தன்மையை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று  குறிப்பிடப்பட்டது.

மேலும், சந்தையில் நம்பிக்கை பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டால், சேமித்தவர்கள் சிலர் கணக்கில் சேமிப்பைத் திரும்பக் கேட்பர். அதன் விளைவாக, 186 வங்கிகள் திவால் அடையும் நிலையில் சிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.