இலங்கை – ஐஎம்எஃப் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு
2023-03-19 17:18:03

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியாமபாலாபிட்டியா சனிக்கிழமை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியமும் இந்த ஒப்பந்தத்தை தனது வலைதளத்தில் வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 20ம் நாள் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் வாரியக் கூட்டத்தில் இலங்கைக்கான பிணையெடுப்புத் தொகை 29 கோடி டாலர் குறித்த இறுதி முடிவு செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.