உக்ரைன் நெருக்கடியின் தீர்வுக்கு சீனா தொடர்ந்து முயற்சி
2023-03-20 17:25:13

உக்ரைன் பிரச்சினை குறித்து சீனா எப்போதும் நடுநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது. சீனா மேற்கொண்ட முயற்சியின் நோக்கம், அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்துவதே ஆகும். அரசியல் முறையில் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில், சீனா தொடர்ந்து ஆக்கமுள்ள பங்கு ஆற்றும் என்று  சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென் பின் மார்ச் 20ம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உக்ரைன் மோதலில் ஆயுதங்களை வழங்கியது சீனா அல்ல, அமெரிக்கா தான். முரண்பாட்டைத் தூண்டிவிட்டு, மற்ற நாடுகளை ஒன்றுக்குப் பத்தாக திரித்து குறிப்பிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். இந்நெருக்கடியின் அரசியல் தீர்வுக்கு ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றுவதற்கு மாறான செயல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.