5ஆவது பாக்தாத் சர்வதேச உரையாடல் கூட்டம்
2023-03-20 10:38:07

5ஆவது பாக்தாத் சர்வதேச உரையாடல் கூட்டம் மார்ச் 19ஆம் நாள் ஈராக்கின் தலைநகர் பார்தாதில் துவங்கியது. ஈராக் போர் மூண்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டின் எதிர்காலம் குறித்து, ஈராக்கின் அரசு அதிகாரிகளும், அந்நாடு மற்றும் வெளிநாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்களும் 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் விவாதம் நடத்தியுள்ளனர்.

ஈராக் மீது அமெரிக்க இராணுவம் போர் தொடுத்ததன் 20ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி தொடங்கப்பட்ட இக்கூட்டம் சர்வதேச சமூகத்தில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈராக் தலைமை அமைச்சர் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது, கடந்த துன்பங்கள் மற்றும் சேதங்கள் அனைத்தும் ஈராக்கிற்கு முக்கிய படிப்பினையாகும். தங்கள் நாட்டின் உகந்த இடத்துக்கு திரும்ப ஈராக்கிற்கு மன உறுதியும் திறமையும் உள்ளது என்பது உலகிற்கு நிரூப்பிக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.