சௌதி அரேபியா மற்றும் ஈரானின் புதிய உறவு
2023-03-20 16:52:04

ஈரான் அரசுத் தலைவர் சயீத் இப்ராஹிம் ரைசிக்குச் செளதி அரேபியாவில் பயணம் மேற்கொள்வதற்குச் சௌதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்சாத் அழைப்பு வடுத்துள்ளதாக ஈரான் அரசுத் தலைவர் அலுவலகத்தின் துணைத் தலைவர் முகமது ஜம்ஹிடி 19ஆம் நாள் தெரிவித்தார். இரு நாடுகள் பொருளாதார மற்றும் பிரதேசங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று மன்னர் சல்மான் இக்கடிதத்தில் தெரிவித்தார். இது குறித்து, சௌதி அரேபியாவுடனான உறவை விரிவுபடுத்த ஈரான் தயாராக உள்ளது என்று ரைசி தெரிவித்தார். சீனாவின் முயற்சியைத் தொடர்ந்து சௌதி அரேபியாவும் ஈரானும் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தி, தூதாண்மை உறவை மீட்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.