அமெரிக்காவின் அணு மின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீர் கசிவு
2023-03-20 10:47:04

அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையம் ஒன்றிலிருந்து டிரிடியம் கலந்த சுமார் 15.1 லட்சம் லிட்டர் கதிரியக்க நீர் கசிந்ததுள்ளதாக அம்மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.

இந்த அணு மின் நிலையம் அமெரிக்காவின் எக்ஸெல் எரியாற்றல் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். கடந்த நவம்பர் இறுதியில் நிலத்தடி நீர் கண்காணிப்புப் பணியில் இயல்பற்ற முடிவுகளை கண்டறிந்த இந்நிறுவனம், அதனை மினிசோட்டா மாநிலத்தின் பொறுப்பாளரிடமும் அமெரிக்க அணு ஒழுங்கு ஆணையத்துக்கும் தெரிவித்தது.

ஆனால், இந்தக் கதிரியக்க நீர் கசிவு பற்றிய தகவல் வெளியீடு சுமார் 4 மாதங்கள் தாமதப்படுத்தியே வெளியிடப்பட்டுள்ளது. இது, பொது மக்களிடையில் பொதுப் பாதுகாப்பு பற்றிய கவலையையும் தகவல்களின் வெளிப்படைத்தன்மை பற்றிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.