ரஷிய ஊடகங்களில் ஷி ச்சின்பிங் கட்டுரை வெளியீடு
2023-03-20 10:36:36

ரஷியாவில் அரசு முறை பயணத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் கட்டுரை ஒன்று ரஷிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் முக்கிய பெரிய நாடுகளான சீனாவும் ரஷியாவும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகும். கடந்த 10 ஆண்டுகளில், இரு நாடுகளின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் சீரான வளர்ச்சியடைந்து வருகின்றன. முதலாவதாக, உயர் நிலை பரிமாற்றம் முக்கிய நெடுநோக்கு வழிகாட்டுதலாக பங்காற்றி வருகிறது. இரண்டாவதாக, இரு தரப்புகளும் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி வருகின்றன. மூன்றாவதாக, இரு தரப்புகளின் பல்வேறு நிலைகளிலான பன்முக ஒத்துழைப்பு நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. நான்காவதாக, தலைமுறை தலைமுறையாக நட்புப்பூர்வக் கருத்தை இரு தரப்புகளும் செயல்படுத்தி வருகின்றன. ஐந்தாவதாக, சர்வதேச அரங்கில் இரு தரப்புகள் நெருக்கமாக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பெரிய நாடுகளாக பொறுப்பேற்று வருகின்றன என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நட்பு, ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றைக் கொண்ட பயணம் இதுவாகும். அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் புதிய எதிர்காலத்தை வகுக்க விரும்புகின்றேன் என்று இக்கட்டுரையில் ஷி ச்சின்பிங் கூறியதோடு, இரு தரப்புகள் ஒட்டுமொத்தமான திட்டங்களை வகுத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளின் தரத்தை மேம்படுத்தி, மானுடவியல் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.