அமெரிக்கா ஆதிக்கச் செயல்களை நிறுத்த வேண்டும்:சீனா
2023-03-21 16:55:00

ஈராக்கில் போருக்குப் பின் நிலவும் குழப்பமானது இந்தப் போர் தொடங்கப்பட்டதே ஒரு தவறு மற்றும் பேரழிவு என்பதை நிரூபித்துள்ளது என்று அட்லாண்திக் வார இதழ் இணையதளம் 20ஆம் நாள் விமர்சித்துள்ளது. 20 ஆண்டுகள் நீடித்த போருக்குப் பின்பும், அங்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதற்கான உறுதியான சான்றுகள் அமெரிக்காவிடம் இல்லை. ஆனால் இப்போரில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 90 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுவாசலின்றி அல்லல்பட்டனர்.

அதே வேளையில், பல ஆண்டுகளில், கியூபா, சிரியா, ஜிம்பாப்வே முதலிய நாடுகளுக்கு ஒரு சார்பு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. மேலும், வட கொரியா, ஈரான், வெனிசுலா முதலிய நாடுகளுக்கு நிர்பந்தம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளது.

அமெரிக்கா பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்க ஜனநாயகம், உலகில் பிரிவை விரிவாக்கியுள்ளது.

உலக அமைதியை நனவாக்க விரும்பினால், ஜனநாயகம் என்ற பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது, மோதல் மற்றும் பிளவுகளை உண்டாக்குவது ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்பது மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.