உலகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-ரஷிய ஒத்துழைப்பு
2023-03-23 11:03:15

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷியாவில் மேற்கொண்ட அரசு முறை பயணம் மார்ச் 22 ஆம் நாள் முடிவடைந்தது. இப்பணத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்கள் 2 கூட்டறிக்கைகளில் கையொப்பமிட்டு, இரு தரப்புறவின் வளர்ச்சியையும், பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குரிய திட்டங்களை வகுத்துள்ளனர். நட்புறவு, ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றைக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணம் இதுவாகும் எனபதற்கு பயணத்தின் போது பெறப்பட்ட செழுமையான சாதனைகள் சாட்சியாக அமைந்துள்ளன.

சீன அரசுத் தலைவராக ஷி ச்சின்பிங் தொடர்ந்து பதவி ஏற்ற பின்  மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும். இதில், இரு நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் பல புதிய பொதுக் கருத்துக்களை உருவாக்கினர்.

தற்போது, புதிய யுகத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு வரலாற்றில் மிக உயர் நிலையில் இருந்து தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள அரசியல் நம்பிக்கை வலிமைமிக்கது. மேலும், பயன்தரும் ஒத்துழைப்பு, இரு தரப்புறவின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பகுதியாகும். இப்பயணத்தில் கையொப்பமிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, 8 முக்கிய துறைகளில் இரு தரப்பும் பொருளாதார ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும்.

தவிரவும், அமைதி பேச்சுவார்த்தையானது உக்ரைன் பிரச்சினையைத் தீர்க்கும் மிக நல்ல வழிமுறையாகும் என்றும் சீனா இக்கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, சீனாவின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

சீன-ரஷிய ஒத்துழைப்பு, உலக பலதுருவமயமாக்கம் மற்றும் சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்துக்கு மேலதிக இயக்காற்றலை ஊட்டி, உலகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக உத்தரவாதம் அளிக்கும்.