ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி தரும் ‘மண்டலம் மற்றும் பாதை’ முன்னெடுப்பு :லீ சியென் லூங்
2023-03-25 17:23:27

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் நன்றாக உள்ளதாக சிங்கப்பூர் தலைமை அமைச்சர்  லீ சியென் லூங் அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

‘ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை’முன்னெடுப்பை ஆதரித்து வருகிறோம். சீனா முன்வைத்துள்ள மிகவும் நல்ல நடவடிக்கை இதுவாகும். வளர்ச்சி அடைந்து வரும் சீனா, செழுமையை நோக்கி செல்கிறது. உலகில் சீனாவின் தகுநிலை மேலும் முக்கியமாக மாறி வருகிறது. சீனா, பிராந்திய வளர்ச்சிக்கான ஒத்துழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பங்களிப்பதற்கு அது ஒரு வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

லீ சியென் லூங் மேலும் கூறுகையில்

ஒத்துழைப்பு மற்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது என்ற பிராந்திய வலைப்பின்னலில் சீனா இணைவதற்கு ‘ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை’ உதவுகிறது. அது, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதாக உள்ளது. எனவே, இந்த முன்னெடுப்பு, முழு பிராந்தியத்திலும் வரவேற்கதக்கது. நமது பிராந்தியத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடாக சீனா திகழ்கிறது. சீனாவுடன்  திறப்பு, தொடர்ச்சி மற்றும் பரஸ்பர நலன் தரும் தன்மை கொண்ட உறவை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.  இந்த கோணத்தில் இருந்து பார்த்தால், ‘ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை’ முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு  ஆதரவு அளிக்கிறோம் என்றார்.