கோவிட்-19 தோற்றம் குறித்த ஆய்வுப் பணியில் மீண்டும் அரசியல் தந்திரம் நடத்தும் அமெரிக்கா
2023-03-26 20:17:20

அண்மையில்,  கோவிட்-19 தொற்று நோயின் தோற்றம் குறித்த ஆய்வுப் பணியை அரசியலாக்குவதன் மூலமாக, சீனா மீது அவதூறு பரப்ப அமெரிக்கா மீண்டும் முயற்சித்தது. அமெரிக்கா முதல்முறையாக இதனைச் செய்யவில்லை. உளவுத் துறை 90 நாட்களுக்குள் வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு அறிக்கையை உருவாக்க அமெரிக்க அரசு 2021ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இறுதியில், இவ்வறிக்கையில் ‘சந்தேகம்’ போன்ற சொற்கள் அடங்கின. இதில் பயனுள்ள தகவல் ஏதுவும் இல்லை என்று பொது மக்களால் விமர்சிக்கப்பட்டது. இதனால், இந்த முறை, அபத்தமான அரசியல் கேலிக்கூத்து மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது.

2021ஆம் ஆண்டு தோல்வியடைந்த போதிலும், அமெரிக்கா மீண்டும் இத்தகைய அரசியல் தந்திரத்தை நடத்துவதற்கு காரணம் என்ன? இது பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகையில், இது  நச்சுத்தன்மை வாய்ந்த அரசியல் என்று சுட்டிக்காட்டியது.

கோவிட்-19 தோற்றம் பற்றி புலனாய்வு மேற்கொள்ள வேண்டுமென இவ்வாண்டின் தொடக்கத்தில் கெவின் மெக்கார்த்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவையின் புதிய தலைவராக பதவியேற்றபோது தனது முதலாவது உரையில் தெரிவித்தார்.  சீனா எதிர்ப்பில் வலுவான நிலைப்பாட்டை வெளிக்காட்டுவதன் மூலம், கட்சிகளிடையான போட்டியில் சாதகம் பெறுவதன் தான் அதன் நோக்கமாகும்.

கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் நிறைய சந்தேகங்கள் உண்டு. ஆயினும், அந்நாட்டில் வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு ஒத்துழைப்பு மேற்கொள்ளுமாறு, உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழுவுக்கு அமெரிக்கா ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. வைரஸ் தொற்றின் ஆரம்பக்கட்டத் தரவுகள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. குறிப்பாக, அமெரிக்காவில்  ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகம், நார்த் கரோலினா பல்கலைக்கழக உயிரியல் ஆய்வகம் மற்றும் உலகளாவிய 200க்கும் அதிகமான ராணுவ உயிரியல் தளங்கள் பற்றி, சர்வதேச சமூகம் நிறைய கேள்விகள் மற்றும் கவலைகளைக் கொண்டுள்ளது. அமெரிக்கா கூடிய விரைவில் இவற்றை திறந்து விட்டு, சர்வதேச சமூகத்தின் புலனாய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுப் பணி, அறிவியல்பூர்வமாக திகழ்கிறது. அதில் அரசியல் தந்திரம் கூடாது. அதை அரசியலாக்க மீண்டும் முயற்சித்து வரும் அமெரிக்கா,  தனது பிரச்சினையைத் தீர்க்க முடியாது.