சீன மக்கள் குடியரசுக்கும் ஹோண்டுராஸுக்குமிடையிலான தூதாண்மை உறவு
2023-03-27 10:59:52

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. சீன மக்கள் குடியரசு அரசு,  சீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டபூர்வமான அரசாகும். தைவான், சீன உரிமைப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாத பகுதியாகும். இது மறுக்க முடியாத வரலாற்று மற்றும் சட்ட உண்மை.

இதனடிப்படையில், சீன மக்கள் குடியரசுக்கும் ஹோண்டுராஸுக்குமிடையிலான தூதாண்மை உறவு 26ஆம் நாள் நிறுவப்பட்டது. இதுவரை, உலகிலுள்ள 182 நாடுகள் சீனாவுடன் தூதாண்மை உறவைக் கட்டியமைததுள்ளன. தைவானுடன் 13 நாடுகள் மட்டுமே தூதாண்மை உறவைக் கொண்டுள்ளன. ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேசச் சமூகத்தின் பொது ஒத்த கருத்தாகவும், சர்வதேச உறவுகளின் பொதுக் கோட்பாடாகவும் உள்ளது என்பதை இது காட்டியுள்ளது.

புதிய தகவலின் படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு, உலக வளர்ச்சி முன்மொழிவு மற்றும் உலக நாகரிக முன்மொழிவிலும் ஹோண்டுராஸ் சேர்வதைச் சீனா வரவேற்கின்றது. தொடர்புடைய கட்டுக்கோப்புக்குள், இரு நாட்டுப் பரிமாற்றத்தையும் பயனுள்ள ஒத்துழைப்பையும் இரு நாடுகளும் முன்னேற்றவுள்ளன.  இரு நாடுகளுக்கு இடையிலான பயனுள்ள ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து, வளரும் நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கும் சர்வதேச உறவை ஜனநாயகமயமாக்குவதற்கும் செல்வாக்கை ஏற்படுததும் என்பது குறிப்பிடத்தக்கது.