அமெரிக்க மனித உரிமை நிலைமையில் பின்னடைவு
2023-03-29 10:42:40

2022ம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையை, சீனா 28ம் நாள் வெளியிட்டது. அதில் அதிகமான உண்மைகளும் தரவுகளும், அமெரிக்க மனித உரிமையின் பின்னடைவைக் காட்டியுள்ளன.  2022ம் ஆண்டு அமெரிக்கப் பள்ளிகளில் 302 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இது, 1970ம் ஆண்டு முதல் இதுவரை மிக உயர்ந்த பதிவு என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க தேசிய வானொலி நிறுவனத்தின் செய்தி இணையத்தளம் கடந்த ஆண்டின் நவம்பர் 9ம் நாள் வெளியிட்ட ஆய்வு முடிவில், 72 விழுக்காட்டு ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கல், 68 விழுக்காட்டுக் குடியரசு கட்சி ஆதரவாளர்கள், 70 விழுக்காட்டு நடுநிலை மக்கள் ஆகியோரின் கருத்தில், அமெரிக்காவில் ஜனநாயகம், அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.

சொந்த நாட்டில் மோசமான மனித உரிமை நிலைமையைப் புறக்கணித்து விட்டு, அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி, வெளிநாடுகளின் உள்விவகாரங்களில், அமெரிக்கா தலையிட்டு வருகிறது. ஆனால், எவ்வளவு உயர்ந்த சாக்குபோக்குகளைக் கூறும் போதிலும், உள்நாட்டில் சிறப்பு சலுகை கொண்ட மேல்தட்டு மக்களின் நலன்களைப் பேணிக்காத்து, உலகளவில் மேலாதிக்கம் நாடும் உண்மை நோக்கத்தை, அமெரிக்க அரசினால் மூடிமறைக்க முடியவில்லை.