எதிர் நிலையை உருவாக்கும் ஜனநாயக மாநாடு உலகிற்கு வேண்டாம்!
2023-03-30 11:30:04

ஜனநாயகத்தின் பெயரைப் பயன்படுத்தி தனித்த அரசியல் அணிகள் மற்றும் எதிர் குழுக்களை உருவாக்கும் பொருட்டு. மார்ச் 29ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை அமெரிக்கா 2ஆவது ஜனநாயக உச்சிமாநாட்டை நடத்தியது.

இது தொடர்பாக அமெரிக்காவின் பொறுப்புடைய ஆட்சிக்கலை பற்றிய குயின்சி ஆய்வகம் இணையம் மூலம் வெளியிட்ட கட்டுரையில், ஜனநாயகம் என்னும் கவர்ச்சிகரமான பெயரைப் பயன்படுத்தி அமெரிக்கா உலகத்தை இரு எதிர் பிரிவுகளாக வகுக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்தது. இதனிடையே, ஜனநாயகம், அமெரிக்காவால் சொந்த நாட்டுக்குச் சேவை புரியும் ஒரு வசதியாகப் பயன்படுத்தப்பட்டது என்று பாகிஸ்தான் அறிஞர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஏபி நிறுவனமும், சிகாகோ பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொண்ட ஒரு பொது மக்கள் கருத்து கணிப்பின் முடிவின்படி, அமெரிக்காவில் வயது வந்தோர்களிடையில் 9 விழுக்காட்டினர் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் இயல்பாகச் செயல்பட்டு வருவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபற்றி, அமெரிக்கப் பல்கலைகழகத்தின் சர்வதேச உறவுத் துறை பேராசிரியர் ஜேம்ஸ் கோல்ட்கில் கூறுகையில், அமெரிக்க அரசு உள்நாட்டில் ஒரு ஜனநாயக மாநாட்டை நடத்தி அமெரிக்காவில் நிலவும் வாக்களிக்கும் உரிமை, பொய் தகவல்கள் உள்ளிட்ட பாரபட்சம் மற்றும் சமத்துவமின்மை பிச்சினைகளைக் கையாள வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

தற்போதைய உலகில் மக்களுக்கு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பே தேவை. மாறாக, ஜனநாயகம் என்னும் பெயரில் எதிர் நிலையை உருவாக்கும் உச்சிமாநாடுகள் தேவையில்லை.