© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவி 4 நாட்கள் ஆகிய பிறகு, ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் சியோமாரா காஸ்ட்ரோ விரைவில் சீனப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மார்ச் 30ஆம் நாள் தெரிவித்தது.
இதற்கு முன், ஹோண்டுராஸுடனான உறவை மீட்கும் விதம், தைவானின் ஜனநாயக முன்னேற்றக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், அமெரிக்காவிடம் உதவி கூட கேட்டுக் கொண்டது. ஆனால் அவை எவ்வாறு செயல்பட்டாலும், அவற்றின் முயற்சிகள் வீணாக போயிற்று.
ஜனநாயக முன்னேற்றக் கட்சி நீண்டகாலமாக பணத்தைச் சார்ந்து குறிப்பிட்ட சில நாடுகளுடன் தொடர்புகளை நிலைநிறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் தைவானுடன் தொடர்புடைய பண தூதாண்மை ஊழலில் ஹோண்டுராஸ் பலமுறை சிக்கியுள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் முன்னாள் அரசுத் தலைவரின் மனைவி பணம் கையாடல் செய்ததால் கைது செய்யப்பட்டார். இப்பணத்தின் ஒரு பகுதி நன்கொடை என்ற பெயரில் தைவானிலிருந்து வந்தது.
ஹோண்டுராஸ் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தைவானுடன் தூதாண்மை உறவைத் துண்டி, சீனாவுடன் தூதாணமை உறவை நிறுவ உள்ளதாக சியோமாரா காஸ்ட்ரோ 2021ஆம் ஆண்டு நவம்பரில் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். இத்தகலவால் கவலைப்பட்ட தைவான் சுதந்திர சக்திகள் ஹோண்டுராஸுக்கு பல டாலர் காசோலைகளை வழங்கியதோடு, பணத்தின் மூலம் அந்நாட்டின் ஊடகங்களைப் பயன்படுத்தி சீன-ஹோண்டுராஸ் தூதாண்மை உறவுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கின. ஆனால் இத்தகைய சதி செயல்கள் பயன் பெறவில்லை.
ஹோண்டுராஸ் இணைய பயனாளர் வில்லேடா கூறுகையில், எதிர்கால உலகளவில் முதல் பெரிய பொருளாதாரச் சமூகத்துடனான உறவில் பயனடைய முடியும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் தைவானுடன் தூதாண்மை உறவு கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 22இலிருந்து 13ஆக குறைந்துள்ளது. மேலதிக நாடுகள் ஒரு சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு, சீனாவின் ஒன்றிணைப்பை ஆதரிக்கின்றன. இது தவிர்க்க முடியாத கால ஓட்டமாகும்.