மால்வினாஸ் தீவுகள் பிரச்சினையில் பிரிட்டன் கேட்காதது போல் பாசாங்கு செய்யக் கூடாது
2023-04-04 16:23:35

இவ்வாண்டின் ஏப்ரல் 2ஆம் நாள், மால்வினாஸ் தீவுப் போருக்கான 41ஆவது நினைவுத் தினமாகும். இதை முன்னிட்டு, அர்ஜென்டினா அரசுத் தலைவர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் சமூக ஊடகத்தில் பகிர்வு செய்த குறுகிய காணொலியில், மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவின் ஒரு பகுதியாகும் என்று வலியுறுத்தினார். அதே வேளையில், அமைதியான முறையில் இத்தீவுகள் மீது தன் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஐ.நா.வின் தொடர்புடைய தீர்மானத்துக்கு இணங்க, அர்ஜென்டினா விடுத்த நியாயமான கோரிக்கையை பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பொருட்படுத்தாமல் நடக்க முடியாது.

பிரிட்டிஷ் மக்கள் மால்வினாஸ் தீவுகளைக் கைப்பற்றி அதிலிருந்து வெளியேற விரும்பாத காரணம் என்ன?முதலில், மாஸ்வினாஸ் தீவுகள், தெற்கு பசிபிக் மா கடல் மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் முக்கிய கடல் வழியில் அமைந்துள்ளது. பிரிட்டனுக்கு வெகு தொலைவில் இருந்தபோதிலும், அது மிகவும் முக்கிய உத்திநோக்கு ரீதியான தகுநிலையைக் கொண்டது. இதனால், இதன் மூலம், தென் துருவத்தின் மூலவளத்தைப் பயன்படுத்த பிரிட்டன் திட்டமிட்டுள்ளதாக சில கருத்துகள் தெரிவித்தன.

இரண்டாவதாக, மாஸ்வினாஸ் தீவுகளில், நிலக்கரி, ஈயம், இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் பரவலாக உள்ளன. கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளில், அதற்கு அருகில் நிறைய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் கண்டறியப்பட்டது. இந்நிலைமையில், ஐந்து வட அயர்லாந்துகள் இழந்தால் கூட, ஒரு மாஸ்வினாஸ் தீவுகளை இழக்க முடியாது என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

தற்போது, காலனித்துவ ஆட்சி காலம் முடிந்தது. பிரிட்டன் தரப்பு ஐ.நாவின் தீர்மானத்துக்கு மதிப்பு அளித்து, வெகுவிரைவில் இத்தீவுகளை அர்ஜென்டினாவுக்குத் திரும்ப கொடுக்க வேண்டும்.