தைவான் பிரதேச தலைவரின் அரசியல் அரங்கேற்றத்துக்கு எதிர்ப்பு
2023-04-06 15:49:02

ஏப்ரல் 6ஆம் நாள் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட சீனாவின் தைவான் பிரதேசத் தலைவர் சாய் யிங்-வென், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதி அவைத் தலைவர் மெக்கார்த்தியைச் சந்தித்து உரையாடினார்.

கடந்த ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி அவையின் முன்னாள் தலைவர் பெலோசி தைவானில் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தைவானும் ஒன்றாக கொண்டு வந்த மற்றொரு அரசியல் ஆத்திரமூட்டல் இதுவாகும்.

உண்மையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை மீறிய இச்சந்திப்பின் பின்புறத்தில், தங்களது சுயநலன் உண்டு. அதாவது, இரு தரப்பினரும் அரசியல் சுயநலன்களைத் தேடி பெற விரும்புகின்றனர்.

ஒருப்புறம், அடுத்த ஆண்டில் தைவான் பிரதேச தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ள சாய் யிங்-வென், நடப்பு பயணம் மூலம், தன் சொந்தமான கட்சியான ஜனநாயக முன்போக்கு கட்சியின் சக்தியை விரிவாக்க வேண்டும் என்றும், அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு ஆதாரவைப் பெற்று, தைவான் சுதந்திர சக்தியின் நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகின்றார்.

மறுப்புறம், வாஷிங்டன் அரசியல்வாதிகள், தைவான் மக்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல், தைவானை அமெரிக்க ஆயுத வியாபாரிகள் பணம் எடுக்கும் இயந்திரமாகவும், சீன வளர்ச்சியைத் தடை செய்யும் கருவியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில், தைவானை அழித்தல் என்ற திட்டம் பற்றிய கூற்று அமெரிக்காவிலிருந்து பரவியுள்ளது. தைவான் மீது தாக்குதல் நடத்தப்படால், தைவானின் செமி கண்டக்டர்கள் வசதிகளை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல், தைவான் தீவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும். தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது, சீனர்களின் சொந்தமான விஷயமாகும்.

தவிர, அமெரிக்காவுக்கும் தைவான் தரப்புக்கும் அரசியல் ரீதியான தொடர்புக்கு, உறுதியான பதிலடி அளிப்போம் என்று சீனத் தரப்பு முன்கூடியே தெரிவித்துள்ளது.