பிரான்ஸ்-சீன ஒத்துழைப்பு பல சாதனைகளைப் பெறுவது உறுதி – மக்ரோன்
2023-04-09 16:58:53

பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோன் அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். இது தொடர்பாக பிரான்ஸ் - சீன ஒத்துழைப்பு பல சாதனைகளை உறுதியாகப் பெறும்,  பிரெஞ்சு-சீன நட்புறவு நீண்ட காலம் வாழ்க! என்னும் கருத்துகளை மக்ரோன் சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சமூக ஊடகங்களில் வெளியிட்டு தன் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

பிரான்ஸ் அரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் அவர் சீனாவில் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். இப்பயணத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் இணைந்து பெய்ஜிங் மற்றும் குவாங் சோ மாநகரங்களில் ஆழமான மற்றும் உயர்ந்த தரமான ஒத்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இருநாட்டுத் தலைவர்களின் இச்சந்திப்பானது ஒன்றுக்கு ஒன்றுடனான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தி, இருதரப்பு மற்றும் சர்வதேச மட்டங்களில் சீனாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான திசையைத் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது, சர்வதேச அளவில் உறுதியற்ற தன்மை வாய்ந்த காரணிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தின் அறைகூவல்களையும், பொருளாதாரத்தை வளர்த்து, மக்கள் வாழ்க்கையை உத்தரவாதம் செய்ய வேண்டிய கடமையையும் இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ளன. உக்ரைன் நெருக்கடி, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை முதலிய சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரு நாடுகள் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன. இரு நாட்டு உறவின் நிதானத்தை நிலைநிறுத்துவது, ஒத்த கருத்துக்களை எட்டுவது ஆகியவை இரு நாட்டு உறவின் வளர்ச்சியை முன்னேற்றுவதோடு மட்டுமல்லாமல், உலகத்தின் அமைதியையும் நிதானத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.