ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய 2ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம்
2023-04-14 19:01:52

சீனா, ரஷியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சரக்ள், ஏப்ரல் 13ஆம் நாள் உஸ்பெக்ஸ்தானின் சமர்கண்ட் நகரில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய  2ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை சுதந்திரம் மற்றும்  உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று அந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். "ஆப்கானிஸ்தான் மக்களின் தலைமையில் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சொந்தமான" கோட்பாட்டுக்கு ஏற்ப இந்த நாட்டின் அரசியல் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி பாதையைத் தீர்மானிப்பதை ஆதரிப்பதெனவும் இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு பொறுப்புள்ள நாடுகள் ஆப்கானிஸ்தானிலும் இப்பிரதேசத்திலும் இராணுவ தளங்களை மீண்டும் கட்டியமைப்பதை அவர்கள் உறுதியாக எதிர்த்துள்ளனர். இது பிரதேசங்களின் அமைதிக்கும் நிதானத்துக்கும் துணைபுரியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.