உலகிற்கு நன்மை புரியும் சீன அந்நிய வர்த்தகம்
2023-04-14 12:25:06

சீனச் சுங்கத் துறை 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், மின்சார வாகனம், லித்தியம் மின்கலம், சூரிய வெப்ப ஆற்றல் மின்கலம் ஆகிய சீன தயாரிப்புகளின் ஏற்றுமதி 66.9 விழுக்காடு அதிகரிப்பைக் கண்டுள்ளது, இதன் விளைவாக, சீனாவின் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகம் 2 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்தது. சீன அந்நிய வர்த்தகத்தில் இவற்றின் பங்கு மிக அதிகம்.

இப்போது உலகளவில் பண வீக்கம் அதிகரித்து வருவதனால், அன்னியப் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. இந்நிலையில், சீன அந்நிய வர்த்தகம் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது.

இருப்பினும், முதல் காலாண்டின் புள்ளிவிவரங்களின் படி, சீனச் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். அதேவேளையில், சீனாவின் உயர் நிலை திறப்புப் பணி, அன்னிய வர்த்தகத்துக்கு வலிமையான ஆதரவளித்து வருகிறது.

இவ்வாண்டு ஜனவரி 8ஆம் நாள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீனா மாற்றியது.  அன்னிய வர்த்தக வளர்ச்சியை இதுவும் பெருமளவில் முன்னேற்றியுள்ளது.

சீனப் பொருளாதாரச் செயல்பாட்டின் மீட்சியுடன் சீனாவின் அந்நிய வர்த்தகம் தொடர்ந்து சீராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, உலகிற்கு மேலும் பெரும் நலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.