பிரேசில்-சீன உறவு மற்றும் பிரிக்ஸ் ஒத்துழைப்பு பற்றி பிரேசில் அரசுத் தலைவர் பாராட்டு
2023-04-14 11:32:35

சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரேசில் அரசுத் தலைவர் லுலா 13ஆம் நாள் ஷாங்காய் மாநகரின் புடொங் பிரதேசத்திலுள்ள புதிய வளர்ச்சி வங்கியின் தலைமையகத்தில் அவ்வங்கியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தில்மா ரூசெப் அம்மையாரின் பதவி ஏற்வு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, பிரேசில்-சீன உறவு மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு பற்றி வெகுவாக பாராட்டிய அவர், புதிய வளர்ச்சி வங்கியின் எதிர்கால வளர்ச்சி மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

அதேநாள் ஷாங்காயிலுள்ள ஹுவாவெய் நிறுவனத்தின் ஆய்வகத்தில் அவர் பயணம் மேற்கொண்டு, சீனத் தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினார். அன்றிரவு அவர் ஷாங்காயிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டார்.