இந்தியாவின் வருடாந்திர ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 14 விழுக்காடு வளர்ச்சி
2023-04-14 17:02:56

2023 நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவைத்துறை உள்பட, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 77,018 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஏப்ரல் 2021-மார்ச் 2022 நிதியாண்டை விட 13.84 விழுக்காடு அதிகமாகும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ அறிக்கையில், உலகளாவிய சரிவுக்கு மத்தியில், இந்தியாவின் உள்நாட்டு தேவை சீராக இருப்பதால், 2023 நிதியாண்டில், மொத்த இறக்குமதிகள் முந்தைய நிதியாண்டை விட 17.38 விழுக்காடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வருடாந்திர வெளிநாட்டு வர்த்தகத் தரவுகள் பற்றி  பேசிய, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில், உலகளாவிய எதிர்க்காற்றுக்கு மத்தியில், நாட்டின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, ஏற்றுமதித் துறையின் மீட்சிசக்தியைக் காட்டுகிறது என்று கூறினார்.