அணுக் கழிவு நீரை கடலில் கலக்கும் ஜப்பானின் செயலுக்கு 93.21% எதிர்ப்பு : உலகளாவிய கருத்துக் கணிப்பு
2023-04-15 19:21:19

இவ்வாண்டில் புகுஷிமா அணு உலையில் இருந்து கழிவு நீரை பசிபிக் கடலில் கலக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், பன்னாட்டு சமூகத்தில் மிகுந்த கவன்தை ஏற்படுத்தியதுடன் பரந்த அளவில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சி.ஜி.டி.என் எனும் தொலைக்காட்சி நிறுவனம் உலகளாவிய இணைய பயன்பாட்டாளர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், ஜப்பான் அரசின் இத்திட்டத்திற்கு 93.21 விழுக்காட்டினர் வன்மையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை, ஜப்பானின் திட்டத்தை மதிப்பீடு செய்யும் பணியை, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தொழில்நுட்ப பணிக்குழு நிறைவேற்றவில்லை. இறுதி முடிவு கிடைக்கவில்லை. மேலும், ஜப்பானின் திட்டத்தில் இந்த நிறுவனம் நிர்ணயித்த பாதுகாப்பு விதிகளுக்கு பொருத்தமற்ற  அம்சங்கள் பல நிலவுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருந்த போதிலும், ஜப்பான், அணுக் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை தொடங்கி வைத்தது. இது குறித்து, கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 91.21 விழுக்காட்டினர், ஜப்பானின் இச்செயல், மிகவும் பொறுப்பற்றதோடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி 92.33 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். அதேவேளையில், அணுக்கழிவு நீரை கடலில் கலக்கும் நிலையில், கடல் சுற்றுசூழல் மற்றும் மனித  ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் 90.78விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

இந்த இணைய கருத்துக் கணிப்பு, ஆங்கிலம், பிராஞ்சு,  அரபி  மற்றும் ரஷியா ஆகிய 5 மொழிகளில் இணையதளங்களில் மேற்கொள்ளப்பட்டது. 24 மணிநேரத்தில் மொத்தம் 33746 பேர் இதில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.