பிரேசில் அரசுத் தலைவர் லுலாவின் சிறப்பு நேர்காணல்
2023-04-15 20:42:02

சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரேசில் அரசுத் தலைவர் லுலா டா சில்வா சமீபத்தில் சீன ஊடக குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடனான பேச்சுவார்த்தை,  சீனாவுக்கான பிரேசில் கொள்கைகள்,  பிரிக்ஸ் நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் சீனாவின் முதலீடு, சீனாவின் நவீனமயமாக்கல் பாதை உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

பிரிக்ஸ் நாடுகள் அமைப்பின் செயல்திறன் உலகளவில் ஏற்படுத்திய விவாதம்  பற்றி லுலா கூறுகையில்

முதலில், இத்தகைய சர்ச்சை அல்லது விவாதம் மிகவும் இயல்பானது. ஏனென்றால், இது, புதிய விஷயம். புதிய விஷயத்தை உருவாக்கினால், ஒருபுறம், நேர்மையான விளைவு ஏற்படும். மறுபுறம் எதிர்மறை விளைவும் ஏற்பட சாத்தியம் உள்ளது. எடுத்துக்காட்டாக, எமது அமெரிக்க நண்பர்கள், வங்கியோ அல்லது நாணயமோ  போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட  விஷயம் பற்றி கவலை தெரிவித்தனர்.  ஏனென்றால், வெளிநாட்டு வர்த்தக்கத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டை கைவிடுவது என்பது எமது இலக்கு என்று அவர்கள் கருதுகின்றனர். ஐரோப்பா, யூரோ நாணயத்தை வெளியிட்ட போது, இப்படி தான். அமெரிக்கா மிகவும் மகிழ்ச்சியடைவில்லை என்று தெரிவித்தார்.

என் பார்வையில், ஒருமைப்பாட்டு நாணய அமைப்புமுறையை உருவாக்க  வேண்டும் என்றால், சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க டாலர் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளத் தேவை இல்லை. நமது இரு நாடுகள் முற்றிலும் ஒருமைப்பாட்டு நாணய அமைப்புமுறையை உருவாக்கலாம். இரு நாடுகளின் மத்திய வங்கிகள் ஏற்பாடு செய்து, சொந்தமான நாணயம் மூலம் வர்த்தகப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இது, புதிய அணுகுமுறை. இதை ஆய்வு செய்ய வேண்டும். பிரேசிலும் சீனாவும்,பெரிய நாடுகளாக விளங்குகின்றன. மேலும் இந்தியா,ரஷியா, தென் ஆப்பிரிக்கா, சௌதி அரேபியா ஆகிய நாடுகளுடன் இணைந்து, உலகில் பாதியளவுக்கும் மேலான மக்கள் தொகை பிரிக்ஸ் நாடுகள் அமைப்பில் இடம்பெறுகிறது. மாபெரும் பொருளாதார அளவு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை நாங்கள் கொண்டுள்ளோம்.  பிரிக்ஸ் நாடுகளின்  புதிய வளர்ச்சி வங்கியை  பெரிய ரக வங்கியாக மாற்றுவது அவசரமில்லை என்று நம்புகிறேன்.  சிந்தனையுடன் பணியாற்றி, தவறுகளைத் தவிர்த்து,  புதிய வளர்ச்சி வங்கியை வளர்ந்து வரும் நாடுகளை இலக்கு வைக்கும் மாதிரியாக உருவாக்க வேண்டும் என்று லுலா சுட்டிக்காட்டினார்.