அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச தடைக்கு சீனா எதிர்ப்பு
2023-04-15 17:47:42

ரஷியாவுடன் தொடர்புடையதாக இருப்பதைக் காரணமாக கொண்டு, சில சீன தொழில் நிறுவனங்களின் மீது அமெரிக்கா அண்மையில் தடை நடவடிக்கை மேற்கொண்டது குறித்த கேள்விக்கு, சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 15ஆம் நாள் பதிலளித்தார். அவர் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயலுக்குச் சர்வதேச சட்ட அடிப்படை ஏதும் இல்லை. ஐ.நா பாதுகாப்பவையின் அதிகார அங்கீகாரமும் இல்லை. இது முற்றிலும் ஒருதலைப்பட்ச தடை நடவடிக்கையாகும். சீன தொழில் நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகளைக் கடுமையாக சீர்குலைத்து உலக விநியோக சங்கிலி மற்றும் தொழில் சங்கிலியின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் அது பாதித்துள்ளது. இதற்குச் சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.