ஐரோப்பிய பொருளாதாரம் எதிர்நோக்குகின்ற மூன்று அறைகூவல்கள்
2023-04-15 17:33:54

பணவீக்கத்தைக் கட்டுபடுத்துதல், பொருளாதார மீட்சி போக்கை பராமரித்தல், நிதி நிதானத்தைப் பேணிக்காத்தல் ஆகிய மூன்று அறைகூவல்களை ஐரோப்பிய பொருளாதாரம் எதிர்நோக்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஆல்ஃபிரட் கார்மோ 14ஆம் நாள் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2023ஆம் ஆண்டு வசந்தகாலக் கூட்டத்தில் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் சந்திப்பில் கார்மோ கூறுகையில், பதற்றமான நிலையிலுள்ள தொழிலாளர் சந்தை, மீண்டும் எரியாற்றல் விலை அதிகரிப்பு, தீவிரமாகி வரும் புவிசார் அரசியல் பிரிவினை உள்ளிட்ட காரணிகளால் ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சிக்கு தடைஏற்படுத்துவதோடு, பணவீக்கத்தை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்தார்.