சீன-ஜெர்மனி தூதாண்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தை
2023-04-15 18:42:24

சீன வெளியுறவு அமைச்சர் ச்சின் காங், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேயர்போக் ஆகியோரின் தலைமையில் சீன-ஜெர்மனி தூதாண்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய 6ஆவசு சுற்று நெடுநோக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ச்சின் காங் கூறுகையில், சீனாவும் ஜெர்மனியும் போட்டியாளர்கள் இல்லை, கூட்டாளிகளாகும். சுதந்திரமாக இரு தரப்பு உறவை வளர்க்க வேண்டும். ஜெர்மனியுடன் பன்முக பரிமாற்றம் மேற்கொண்டு, அனைத்து துறைகளிலும் உள்ள ஒத்துழைப்பை முன்னெடுக்க சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கிடையே 70க்கும் அதிகமான பேச்சுவார்த்தை அமைப்புமுறைகளை மீண்டும் தொடங்கி அவற்றின் செயல்பாட்டை விரைவுப்படுத்த வேண்டும் என்று ச்சின் காங் அறிவுரை கூறினார்.

பேயர்போக் கூறுகையில், சீனாவுடனான உறவை சுதந்திரமாக வளர்த்து வரும் ஜெர்மனி, பல்வேறு துறைகளிலான இரு நாடுகளின் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதை எதிர்பார்க்கின்றது. பொருளாதாரத் தொடர்பு மற்றும் விநியோகச் சங்கிலிகளைத் துண்டிக்கும் செயலை ஜெர்மனி எதிர்ப்பதோடு, ஒரு தரப்பு நியாயமான முறையில் மற்ற தரப்பின் தொழில் நிறுவனங்களை அணுக வேண்டும் என்பதைக் கடைபிடிக்கிறது என்று தெரிவித்தார்.