அமெரிக்காவில் ஆபத்தான பொருட்களுடன் தடம் புரண்ட தொடர்வண்டி
2023-04-16 17:31:26

அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தில் சரக்கு தொடர்வண்டி ஒன்று 15ஆம் நாள் தடம் புரண்டு தீ விபத்துக்குள்ளானது. அதில் குறைந்தது 3பேர் காயமடைந்தனர். அதில் ஆபத்தான பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

அண்மையில் அமெரிக்காவில் ஆபத்தான பொருட்களுடன் செல்லும் தொடர்வண்டி தடம் புரண்டு விபத்துக்களுள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.  

குறிப்பாக, பிப்ரவரி 3ஆம் நாள் ஆபத்தான வேதிப் பொருட்களுடன் தொடர்வண்டி ஒன்று ஓஹியோ மாநிலத்தின் கிழக்கு பாலஸ்தீனம் என்ற ஊரைக் கடந்து சென்ற போது, தடம் புரண்டது. தடம் புரண்ட தொடர்வண்டியில் இருந்து வெளியேறிய வேதிப்பொருட்கள் எரிந்து, இருண்ட புகை வானத்தில் வீசியதால், 

உள்ளூர் வாசிகளிடையே பெரும் கவலையும் சந்தேகமும் ஏற்படுத்தப்பட்டன.