சீனாவின் சுகாதார மற்றும் ஆரோக்கிய நிலைமையின் முன்னேற்றம்
2023-04-17 14:07:29

2022ஆம் ஆண்டுக்கான சீனச் சுகாதார மற்றும் ஆரோக்கிய வளர்ச்சி மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட கூட்டம் 15ஆம் நாள் சீனாவின் வெய் ஹெய் நகரில் நடைபெற்றது. இதில், அரசு வாரியங்கள், சிந்தனைக் கிடங்கு, தொழில் சம்மேளனம், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நிபுணர்களும் அறிஞர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு புதிய யுகத்தில் சீனச் சுகாதார மற்றும் ஆரோக்கிய இலட்சியத்தின் புதிய வளர்ச்சியை ஆய்வு செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் சுகாதார மற்றும் ஆரோக்கிய நிலைமை நிதானமாக வளர்ந்து வருகின்றது. பெய்ஜிங், ஷாங்ஹாய், சே ச்சியாங் ஆகியவற்றின் ஆரோக்கிய வளர்ச்சி நிலைமை சீனாவின் முதல் 3 இடங்களில் உள்ளன என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.